"வாடகை வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன" - அமைச்சர் மனோ தங்கராஜ்

0 3204

கேரளாவைப் போன்று தமிழகத்திலும் செயலி மூலம் வாடகை வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு DOT நிறுவனம் உருவாக்கிய பிரத்யேக ஸ்மார்ட் வாட்சை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநில குடும்ப தரவு தொகுப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்குமான அரசின் திட்டங்கள் சென்றடையும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments